பலஸ்தீனுக்காக களம் இறங்க தயாராகும் ரஷ்யப் படை; இஸ்ரேலுக்கு பேரிடி..!

0
291

பாலஸ்தீனத்திற்கு உதவ சென்சினியாவின் தலைவர் ரம்ஜான் கதிரோவ் படைகளை அனுப்ப முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதிரோவ் என்பது ரஷ்யாவின் செச்னியாவில் உள்ள ஒரு துணை இராணுவ படையாகும். ரஷ்யாவின் வாக்னர் படை ஒரு கட்டத்தில் அரசுக்கு எதிராக திரும்பியபோது அதை எதிர்த்து சண்டையிட்டது இந்த துணை ராணுவ படைதான்.

இந்த படையின் தலைவரான ரம்ஜான் கதிரோவ் தான் இப்போது பலஸ்தீனுக்காக படைகளை அனுப்ப முன்வந்துள்ளார்.

அமைதி காக்கும் படை

இது தொடர்பில் அவர் கருத்துரைக்கையில்,

இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும், அதேபோல மேற்குலக நாடுகள் போராளிகளை அழிப்பதாக சொல்லிக்கொண்டு பொதுமக்களை கொல்வதை தவிர்க்க வேண்டும்.

இந்தப் போரில் நாங்கள் பாலஸ்தீனத்தை ஆதரிக்கிறோம், நாங்கள் இந்த போருக்கு எதிராக இருக்கிறோம், இது மற்ற மோதல்களைப் போலல்லாமல் மேலும் மேலும் அதிகரிக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கிறது.

மத்திய கிழக்கின் ஒழுங்கை மீட்டெடுக்க அமைதி காக்கும் படையாக செச்சென் பிரிவுகளை நிலைநிறுத்த நாம் தயாராக இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

ஈரான் இந்த போரில் பாலஸ்தீனத்திற்கு உதவுவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டிவருகிறது, ஆனால் ஈரான் அதை மறுத்திருக்கிறது.

அதேநேரம், ஏதாவது ஒரு குண்டு ஈரான் பக்கம் திரும்பினால் கூட இஸ்ரேல் பேரழிவை சந்திக்க நேரும் என்றும் ஈரான் எச்சரித்திருந்தது.

சண்டை செய்யவும் தயார்

இதற்கிடையே அமெரிக்காவும் தனது பங்குக்கு போர் கப்பலினை தற்போது காசாவுக்கு அருகில் நிறுத்தி வைத்திருக்கிறது.

ஒருவேளை இந்தப் போரில் அமெரிக்க படை, இஸ்ரேலுடன் சேர்ந்து தாக்குதலில் ஈடுபட்டால் ரஷ்யாவும், சீனாவும் சேர்ந்து ஈரானுக்கு ஆயுத உதவிகளை செய்யும்.

இஸ்ரேலுக்கு பேரிடி..! பலஸ்தீனுக்காக களம் இறங்க தயாராகிறது ரஷ்யப் படை | Ready To Send Aid To Palestine Ramjan Said

அதன் பின்னர் ஈரான் தான் ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் கோலோச்சும் நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்திருந்தார்.

இப்படி நிலைமை இருக்கையில் ரஷ்யாவின் துணை இராணுவ படைகளில் ஒன்றான செச்சென் பிரிவு பாலஸ்தீனத்திற்கு உதவுவோம் என்று மட்டும் கூறவில்லை அவசியமேற்பட்டால் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக சண்டை செய்யவும் தயாராக உள்ளோம் என்று பகிரங்கமாக அறிவித்திருப்பது இஸ்ரேலுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.