ரசிகர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்!

0
169

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மும்பையில் தன்னுடைய ரசிகர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி உள்ள புகைப்படங்கள் வைரலாகிறது.

ரகுல் ப்ரீத் சிங் கடந்த 2009ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கில்லி மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து 2011ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் கைவசம் இந்தியன் 2 மற்றும் அயலான் என இரண்டு பிரம்மாண்ட படங்கள் உள்ளன.

இதில் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார். கமல்ஹாசன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல் அயலான் படத்தை இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கி உள்ளார்.

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங், இப்படம் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். தன்னுடைய பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடி உள்ளார்.

மும்பையில் தனக்காக கேக்குடன் காத்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் அவர்களுடன் இணைந்து தன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார்.