இடைவிடாத குண்டுவெடிப்பு – சமீபத்திய உயிரிழப்பு புள்ளிவிவரங்கள்!

0
251

இஸ்ரேலின் போர் விமானங்கள் காசா நகரம் மீது குண்டு மழை பொழிந்ததுள்ளதால் ஹமாஸ் – இஸ்ரேல் இடையேயான சண்டை உக்கிரம் அடைந்துள்ளது. இஸ்ரேல் இராணுவம் காசா நகரில் பொழிந்த குண்டு மழைகளால் காசாவில் உள்ள பல கட்டிடங்கள் தரை மட்டமாகின.

இதனிடையே, ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலில் தங்கள் கட்டுப்பாடுகளில் இருக்கும் பகுதிகளில் உள்ள ஏராளமானோரை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து இருப்பதாக இஸ்ரேல் இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக துருக்கி உதவியை இஸ்ரேல் நாடியிருப்பதாகவும் துருக்கியும் பேச்சுவார்த்தையை தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் 600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேல் படைகள் நடத்திய பதில் தக்குதலில் பயங்கரவாதிகள் 400 பேர், பொதுமக்கள் 300 பேருக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்திய உயிரிழப்பு விவரங்கள்

கொல்லப்பட்டவர்கள்: 950

காயமடைந்தவர்கள்: 5,000

பலஸ்தீனிய மேற்குக் கரையை ஆக்கிரமித்ததில்

கொல்லப்பட்டவர்கள்: 23

காயமடைந்தவர்கள்: 130

இஸ்ரேல்

கொல்லப்பட்டவர்கள்: 1,200

காயமடைந்தவர்கள்: 3,007

பாலஸ்தீன சுகாதார அமைச்சு, பாலஸ்தீன ரெட் கிரசண்ட் சொசைட்டி மற்றும் இஸ்ரேலிய இராணுவம் இந்த விவரங்களை தெரிவித்துள்ளன.

வெண் பாஸ்பரஸ் குண்டுகள்:

அங்கு 130 பேரை பிணைக் கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் பிடித்துவைத்துள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் இஸ்ரேல் – பாலஸ்தீன மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாகியுள்ளது.

வடக்கு காசா உட்பட மக்கள் குடியிருப்புகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குவதாக பாலஸ்தீனம் குற்றச்சாட்டு வருகிறது. குறிப்பாக வெண் பாஸ்பரஸ் குண்டுகளை இஸ்ரேல் பயன்படுத்துவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளன.

பாலஸ்தீனியர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்களையும் பதிவிட்டு வருகின்றன. இந்த வெண் பாஸ்பரஸ் குண்டுகள் என்பது கடுமையான வெப்பத்தை வெளிப்படுத்தக் கூடியவை.

நெருப்பு மழை பொழிவது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. விரைவில் தீப்பற்றும் ரசாயனமான வெண் பாஸ்பரஸ் காற்றில் படும் போது பயங்கரத்தை வெளிப்படுத்தும்.