ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்

0
156

ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரின் 25வது படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி இந்த படத்திற்கு கிங்ஸ்டன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷ்-இன் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் கிங்ஸ்டன் படத்தை இயக்குநர் கமல் பிரகாஷ் எழுதி இயக்குகிறார்.

இது ஜி.வி. பிரகாஷ் குமார் தயாரிக்கும் முதல் படம் ஆகும். மேலும், இந்தப் படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.