128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்

0
161

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதன்முதலாக 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட்ட விளையாடப்பட்டது. அதனை பின்னர் 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டுடன் சேர்த்து பேஸ்பால்/சாஃப்ட்பால் (Softball), ஃபிளாக் ஃபுட்பால் (Flag Football), லெக்ராஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மும்பையில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளைச் சேர்ப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது. ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் இருபதுக்கு இருபது ஆட்டமாக நடத்த முடியும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

மேலும், ஐ.சி.சி தரவரிசையில் முதல் ஆறு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டியில் விளையாட நேரடித் தகுதி பெறும் எனவும் ஆட்ட நேரத்தைக் கருத்தில் கொண்டு 50 ஓவர்கள் போட்டியைப் பரிசீலனை செய்யவில்லை எனவும் ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

1900ஆம் ஆண்டு கிரிக்கெட் பாரிஸ்ல் இரு நாள்களுக்கு நான்கு இன்னிங்ஸாக விளையாடப்பட்டது. இந்த போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி கிரேட் பிரிட்டன் தங்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Cricket at the 1900 Summer Olympics

Cricket at the 1900 Summer Olympics