உலகில் நவீன இந்தியர்கள் குடியேறாத நாடுகள்

0
164

உலகில் உள்ள பல நாடுகளிலும் இந்தியர்கள் குடியேறி அந்நாடுகளில் வசித்து வருகின்றனர். எனினும் பாகிஸ்தானில் குடியேற இந்தியர்கள் விரும்புவதில்லை எனக்கூறப்படுகிறது.

அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஏனைய நாடுகளில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் குடியேறியுள்ளனர். உலகில் சுமார் 195 நாடுகளில் இந்தியர்கள் வாழ்கின்றனர்.

ஆனால் சில நாடுகளில் ஒரு இந்தியர் கூட இல்லை. அத்துடன் ஐரோப்பாவிலும் இந்தியர்கள் வாழாத பல நாடுகள் உள்ளன.

வத்திக்கான் நகரம்

ஐரோப்பிய நாடான வத்திக்கான் நகரம் உலகின் மிகச்சிறிய நாடு. நாட்டின் பரப்பளவு 0.44 சதுர கிலோமீட்டர்கள் மட்டுமே. அங்கு வாழும் மக்கள் ரோமன் கத்தோலிக்க மதத்தை சேர்ந்தவர்கள். அந்த நாட்டின் மக்கள் தொகையும் மிகக் குறைவு. அந்த நாட்டில் ஒரு இந்தியர் கூட வாழவில்லை. ஆனால் இதற்கு நேர்மாறாக இந்தியாவில் ரோமன் கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றும் கிறிஸ்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

சென் மெரினோ

Saint Marino

சென் மெரினோ ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறிய குடியரசு நாடு. இங்குள்ள மொத்த மக்கள் தொகை 3 லட்சத்து 35 ஆயிரத்து 620. இந்நாட்டு மக்கள் தொகையில் ஒரு இந்தியர் கூட இல்லை. ஆனால் இந்திய சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டுக்கு சென்று வருகின்றனர்.

Republik Bulgaria

பல்கேரியா

பல்கேரியா தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு. இது அதன் இயற்கை அழகுக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. 2019 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பல்கேரியாவின் மொத்த மக்கள் தொகை 6,951,482 ஆகும். இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் கிறிஸ்துவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். இந்த நாட்டில் இந்தியர்கள் இல்லை. எனினும், இந்திய இராஜதந்திரிகள் கடமையாற்றி வருகின்றனர்.

Tuvalu Island

துவாலு

துவாலு ஓசியானியா கண்டத்தில் உள்ள ஒரு தீவு நாடு. துவாலு எல்லிஸ் தீவுகள் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த நாடு அவுஸ்திரேலியாவின் வடகிழக்கில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் மக்கள் தொகை சுமார் 10 ஆயிரம். தீவில் 8 கிமீ நீள சாலைகள் மட்டுமே உள்ளன. இங்கு இந்தியர்கள் எவரும் வசிக்கவில்லை. இந்த நாடு 1978 இல் சுதந்திரம் பெற்றது.

Pakistan Tamils in Karachi

பாகிஸ்தான்

நவீன இந்தியர்கள் வசிக்காத நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் உள்ள போதிலும் அங்கு சுதந்திரத்திற்கு முன்னர் குடியேறிய தமிழர்கள், சீக்கியர்கள் உட்பட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். எனினும் அவர்கள் பாகிஸ்தான் பிரஜைகள்.

இந்தியா – பாகிஸ்தான் இடையில் நிலவும் பதற்றம் காரணமாக புதிதாக பாகிஸ்தானுக்கு சென்று குடியேற இந்தியர்கள் விரும்புவதில்லை.