இரண்டாவது குழந்தைக்கு தந்தையான பிக் பாஸ் ஆரவ்!

0
229

பிக்பாஸ் பிரபலம் ஆரவ் தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 2020ம் ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் காதலியும், நடிகையுமான ராஹேன் என்பவரை ஆரவ் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு ஏற்கனவே கடந்த 2021ம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்த நிலையில் தற்போது இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில்,

எங்கள் விலைமதிப்பில்லா குட்டி இளவரசியை உலகிற்கு அறிமுகப்படுத்தும் போது, எங்கள் இதயங்கள் மகிழ்ச்சியால் வெடிக்கின்றன.

அவள் ஏற்கனவே எங்கள் வாழ்க்கையை சிரிப்பு மற்றும் முடிவற்ற அரவணைப்புகளால் நிரப்பியுள்ளதால் எங்கள் குடும்பம் முழுமை அடைந்ததாக உணர்கிறோம்.

மேலும் எண்களின் ஒவ்வொரு தருணத்தையும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறோம். எங்களுடைய பெண் குழந்தையுடன் இந்த அழகான பயணத்தை துவங்கியுள்ளோம். உங்கள் அன்பு மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி என ஆரவ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.