இளைஞர்கள் சிகரெட் வாங்க பிரிட்டன் தடை விதிக்க தீர்மானம்!

0
175

பிரித்தானியாவில் இளைஞர்கள் சிகரெட் கொள்வனவு செய்யும் செயற்பாட்டுக்கு தடை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த பிரேரணை சட்டமாக நிறைவேற்றப்பட்டால் ஒவ்வொரு வருடமும் சிகரெட் வாங்குவதற்கான வயது ஒரு வருடமாக அதிகரிக்கப்படும் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த திட்டத்திற்கமைய 2040ஆம் ஆண்டுக்குள் இளைஞர் சமூகம் மத்தியில் புகைப்பிடிப்பதை விரைவில் நிறுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை புகைபிடிப்பதால் ஏற்படும் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு பிரித்தானிய சுகாதார சேவைக்கு ஒவ்வொரு வருடமும் 17 பில்லியன் பவுண்டுகள் செலவாகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.