பிரபல நடிகை ஜெயதேவி காலமானார்

0
220

பிரபல தயாரிப்பாளரும்,  இயக்குநரும் , நடிகையுமான ஜெயதேவி நேற்று அதிகாலை காலமானார். இவர் வாழ நினைத்தால் வாழலாம், நன்றி  மீண்டும் வருக, புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது போன்ற படங்களை தயாரித்துள்ளார்.

விலாங்கு மீன், பவர் ஆப் வுமன், புரட்சிக்காரன் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயதேவி 20 வயதில் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

இவர் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராம், மற்றும் வேலு பிரபாகரன் ஆகியோரை சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமையும் ஜெயதேவியை தான் சேரும்.

Jayadevi Passed Away

பின்னர் ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான வேலு பிரபாகரனை காதலித்து கரம் பிடித்தார். திருமணமான சில வருடங்கள் கழித்து, வேலுபிரபாகரனுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார். இவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இவருடைய உடல் போரூரில் உள்ள அவரின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் நாளை இவரின் இறுதி சடங்குகள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.