18 பெண்கள் பாலியல் வன்கொடுமை; 215 பேருக்கு தண்டனை!

0
184

இந்தியாவை உலுக்கிய தர்மபுரி மாவட்டத்தில் வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 215 பேரின் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

மலைவாழ் பெண்கள் வன்கொடுமை

தருமபுரி மாவட்டம், வாசாத்தி மலைக்கிராமத்தில் சந்தனமரங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறி கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் 20ம் திகதி வனத்துறையினர், காவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கிராமத்தில் உள்ள இளம் பெண்கள் 18 பேரை அதிகாரிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

18 பெண்கள் பாலியல் வன்கொடுமை; 215 பேரிற்கு தண்டனை! | Vasathi Dharmapuri Sexual Punishment215 People

இதுகுறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்கை விசாரித்து. 4 ஐ.எப்.எஸ். அதிகாரிகள் உள்பட வனத்துறையினர், காவல்துறை, வருவாய் துறையினர் என 269 பேர் மீது பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

18 பெண்கள் பாலியல் வன்கொடுமை; 215 பேரிற்கு தண்டனை! | Vasathi Dharmapuri Sexual Punishment215 People

50 இற்க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

இந்த வழக்கு விசாரணையின்போது குற்றச்சாட்டப்பட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துவிட்டனர். இந்நிலையில் மீதமிருந்த 215 பேருக்கு ஓர் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் அவர்களின் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதி வேல்முருகன் இன்று தீர்ப்பளித்தார்.

18 பெண்கள் பாலியல் வன்கொடுமை; 215 பேரிற்கு தண்டனை! | Vasathi Dharmapuri Sexual Punishment215 People

மேலும் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டதுடன் அவர்களுக்கு அரசு வேலை அல்லது சுய வேலைவாய்ப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் புகார் அளித்த போது உரிய நடவடிக்கை எடுக்காத அப்போதைய மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.