கமல் இல்லாமல் அடுத்தடுத்து வெளியாகும் பிக்பாஸ் ப்ரோமோக்கள்!

0
140

பிக்பாஸ் ஏழாவது நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ கமல் இல்லாமல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான ப்ரோமோ அண்மையில் வெளியானது.

எப்போதும் ஒரு வீட்டில் நடக்கும் பிக்பாஸ் இந்த முறை இரண்டு வீடுகளில் நடக்கப்போகிறது. இரண்டு வீடுகளில் பிக்பாஸ் போட்டி எப்படி நடைபெறும், ஏதேனும் மாற்றம் இருக்கின்றத என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது.

இந்த நிலையில் உலகநாயகன் இல்லாமல் அடுத்தடுத்து இரண்டு ப்ரோமோ வெளியாகியுள்ளது. முதல் ப்ரோமோவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏற்கனவே கலந்துகொண்ட ப்ரியங்கா, ஆயிஷா, அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் இடம்பெற்றிருக்கின்றனர்.

தற்போது வெளியான ப்ரோமோவில் ஜி.பி முத்து இடம்பெற்றுள்ளார். அதில் இரண்டு வீடா இருந்தால் வெற்றியாளரும் இரண்டு பேரா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்த ப்ரோமோவும் ரசிகர்களிடையே வைரலாக்கப்பட்டு வருகின்றது.