இத்தாலிய மாஃபியா கும்பல் தலைவரான Matteo Messina Denaro காலமானார்

0
187

இத்தாலிய மாஃபியா கும்பலின் தலைவரான Matteo Messina Denaro, இன்று உயிரிழந்துள்ளார். அதன்படி இவ்வாண்டின் ஆரம்பத்தில் கைது செய்யப்படும் வரையில் இத்தாலி நாட்டில் மிகவும் தேடப்படும் நபர்களில் ஒருவராக அவர் இருந்துள்ளார்.

61 வயதான அவர் மோசமான notorious Cosa Nostra Mafiaவின் தலைவராக கருதப்பட்ட இவர் ஜனவரி மாதம் அவர் கைது செய்யப்படுவதற்கு முன்பு 30 வருடங்கள் தப்பி ஓடி மறைந்திருந்தார். இந்நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்ட போது புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த மாதத்தில் சிறையிலிருந்து வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். Matteo Messina Denaro, பல கொலைகளுக்கு காரணமானவர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1992 ஆம் ஆண்டு பல குற்றங்களுக்காக அவர் 2002ஆம் ஆண்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.

மேலும், 1993 ஆம் ஆண்டு முதல் அவர் தப்பியோடியவராக காணப்பட்டாலும் , Messina Denaro பல்வேறு ரகசிய இடங்களில் இருந்து தனக்கு கீழ் பணிபுரிபவர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்து வந்ததாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.