யாழ் கோட்டையில் சந்தோஷ் நாராயணனை சந்தித்த பிக் பாஸ் ஜனனி!

0
207

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை பிக் பாஸ் ஜனனி சந்தித்துள்ளார்.

எதிர்வரும் ஒக்டோபர் 21ம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் மாலை 4 மணிக்கு சந்தோஷ் நாராயணன் பங்கேற்கும் ‘யாழ் கானம்’ இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு யாழ்.வந்துள்ள சந்தோஷ் நாராயணன் நேற்று நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும், யாழ்ப்பாணத்தை சேர்ந்த கலைஞர்களை யாழில் உள்ள விருந்தினர் விடுதியில் சந்தித்து கலந்துரையாடினார்.

இந்நிலையில் பிக் பாஸ் புகழ் ஜனனி யாழ்ப்பாணம் கோட்டையில் சந்தோஷ் நாராயணனை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Big Boss Janany Kunaseelan