சாமி தரிசனம் செய்த சந்திரமுகி!காணொளியை பகிர்ந்த படக்குழு

0
208

‘சந்திரமுகி -2’ திரைப்படம் வெற்றியடைய வேண்டி படக்குழுவினர் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ பேடம்மா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இது தொடர்பான காணொளியை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் ‘சந்திரமுகி -2’ பிரமாண்டமாக உருவாகியுள்ளது.

மேலும், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 28ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் வெளியீட்டு பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள ஸ்ரீ பேடம்மா கோவிலில் படக்குழு சாமி தரிசனம் செய்யும் காணொளி இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.

மேலும், சந்திரமுகி 2 படத்தின் ”நீ கோசம்” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்த காணொளிகளும் இணையத்தினை ஆக்கிரமித்து வருகின்றது.