இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்த புதுடெல்லியில் “டெக் மியூசியம்”

0
239

இந்தியாவின் வளர்ந்துவரும் மற்றும் வருங்கால தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் வகையில் புதுடெல்லியில் தொழில்நுட்ப (Tech Museum) அருங்காட்சியகத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உத்தேச தொழில்நுட்ப அருங்காட்சியகம்  நிவ் பாரத் உத்யானில் அமைக்கப்படும்.

யமுனை ஆற்றின் மேற்குக் கரையில் உருவாக்கப்பட்டு வரும் நிவ் பாரத் உத்யானில் அதிநவீன தொழில்நுட்பத்தில் அருங்காட்சியகத்தை அமைக்க திட்டமிடுவதற்கும் வடிவமைத்து மேம்படுத்துவதற்கும் முன்மொழிவுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.  

‘தொழில்நுட்ப அருங்காட்சியகம்’ பார்வையாளர்களுக்கு இந்தியா பயன்படுத்தும் சமீபத்திய தொழில்நுட்பங்களைப் பற்றிய சிறந்த புரிதலை வழங்குவதுடன் பல்வேறு துறைகளில் தேசத்தின் சாதனைகளைப் பற்றி விளக்கும் கண்காட்சி இடமாகவும் இருக்கும்.

3-டி மேப்பிங் நுட்பங்கள், தொடுத்திறைகள், ஏவி ப்ரொஜெக்ஷன், ஹாலோகிராம்கள், மல்டி-டச் போன்ற முதன்மையான தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய விதத்திலும் வடிவமைப்பு மேற்கொள்ளப்படுகிறது. தொழில்நுட்ப அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்கும்.

நிவ் பாரத் உத்யான், யமுனையின் மேற்குக் கரையில் உருவாக்கப்பட்டு வருகிறது, இது அரசாங்கத்தின் மத்திய விஸ்டா மறுவடிவமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மத்திய விஸ்டா ராஷ்டிரபதி பவனில் இருந்து இந்தியா கேட் வரை நீண்டுள்ளது. மெகா திட்டத்தின் கீழ், மத்திய விஸ்டா 2.9 கிமீ முதல் 6.3 கிமீ வரை நீடிக்கப்பட்டுள்ளது.

யமுனை ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள மத்திய விஸ்டாவில் 30 ஏக்கர் நிலப்பரப்பில் நிவ் பாரத் உத்யானை உருவாக்க மத்திய அரசு முன்மொழிந்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.