என் 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி செய்தது இல்லை – கோலி

0
216

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 94 பந்துகளில் 122 ரன்களை விளாசி ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இந்த நிலையில் ஆட்டநாயகன் விருது வென்ற பிறகு கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சுரேக்கரிடம் பேசும் போது விராட் கோலி எடுத்த உடனே ஒரு கோரிக்கையை வைத்தார். 

இன்று மதியம் மூன்று மணிக்கு மீண்டும் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருப்பதால் நேர்காணலை கொஞ்சம் விரைவில் முடித்து விடுங்கள் என்று கூறினார்.

மேலும் தாம் சோர்வாக இருப்பதாகவும் விராட் கோலி கிண்டல் அடித்தார். இதற்கு சஞ்சய் மஞ்சரேக்கர், இரண்டு கேள்விகளில் உங்கள் நேர்காணலை முடித்து விடுகிறேன் என்று கூறி இந்த சதம் குறித்து கேட்டார். 

இதற்கு பதில் அளித்த விராட் கோலி அணிக்காக உதவ வேண்டும் என்பதுதான் என்னுடைய முதல் பணி. இதற்காகத்தான் நான் சிறப்பாக பயிற்சி செய்து வருகிறேன். 

இன்று நானும் கே எல் ராகுலும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தோம். என்னுடைய பணி சிங்கிள்ஸ் எடுத்து ரன்களை சேர்ப்பது தான்.

சிங்கிள்ஸ், டபுள்ஸ் என எளிதாக ரன் எடுப்பதை நான் கர்வமாக கருதுகிறேன். சதம் அடித்த பிறகு இன்று சில வித்தியாசமான ஷார்ட்டுகளை நான் ஆடினேன். 

குறிப்பாக ரிவர்ஸ் ராம்ப் சாட்டில் பவுண்டரி அடிக்கும் போது அதற்கு ஒரு மரியாதை இருக்கிறது. ஆனால் நான் அப்படி விளையாடவில்லையோ என்று தோன்றியது. 

அதை மீண்டும் பார்க்கும்போது எனக்கு அது மோசமான ஷாட் போல் தெரிந்தது. நானும் கே எல் ராகுலும் பாரம்பரிய கிரிக்கெட்டை பின் தொடர்கிறோம். நாங்கள் அதிரடியாக விளையாட முயற்சி செய்யவில்லை.

நல்ல ஷாட்கள் மூலம் ரன் எடுக்க முயற்சி செய்தோம். ராகுலும் நானும் அமைத்த பார்ட்னர்ஷிப் நிச்சயமாக இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு நல்ல அறிகுறியாகும். 

ராகுலின் கம்பேக் மிகவும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நாங்கள் கடினமாக உழைத்து ரன்கள் ஓடிய போது மகிழ்ச்சியாக இருந்தாலும் நாளை மீண்டும் மதியம் விளையாட போகிறோமே என்று நினைத்தேன். என்னுடைய 15 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் தொடர்ந்து மூன்று நாள் நான் விளையாடியது இல்லை.

அதுவும் இலங்கை அணியை எதிர்கொள்ளப் போகிறோம். இது எங்களுக்கு புதிய சவால் தான். இந்த சவாலை வெற்றிகரமாக முடிப்பேன் என எண்ணுகிறேன். 

அதிர்ஷ்டவசமாக நான் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி இருக்கிறேன். எனவே ஓய்வே இன்றி தொடர்ந்து விளையாடுவது என்பது எங்களுக்கு புதிதல்ல. ஆனால் இலங்கையில் மிகவும் வெப்பமாக இருக்கிறது.

வரும் நவம்பர் மாதம் வந்தால் எனக்கு 35 வயதாகிவிடும். எனவே என்னுடைய உடல் நலத்தையும் ஓய்வையும் நான் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த ஆட்டம் நடக்க உதவியாக இருந்த ஆடுகள பராமரிப்பாளர்களுக்கும் மைதான ஊழியர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுடைய பணி மகத்தானது என்று விராட் கோலி கூறியுள்ளார்.