இலங்கையை புறக்கணிக்கும் உலக நாடுகள்; புதிய அரசியல் நெருக்கடி

0
179

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடாவின் இலங்கை விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அரச உள்விவகார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் நிலையில் ஜப்பான் பிரதமர் ஒரு நாள் பயணமாக இலங்கை வருவதற்கு முதலில் திட்டமிட்டிருந்தார்.

எனினும் ஜப்பானிய பிரதமரின் இலங்கை விஜயம் இடைநிறுத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

சனல் 4 வெளியிட்ட வீடியோ: ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள தீர்மானம்

அரச தலைவர்

சமீப காலங்களில் அரச தலைவர் ஒருவர் வர திட்டமிட்டு பின்னர் வராமல் இருப்பது இது இரண்டாவது முறையாகும்.

சீனாவின் சர்ச்சைக்குரிய உளவு கப்பல் இலங்கையில் தரித்து நிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் அயல் நாடுகளுடான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

ரணிலுக்கு ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி: இலங்கையை புறக்கணிக்கும் உலக நாடுகள் | Sri Lanka Current Political Situation India China

இந்திய அமைச்சர்

இந்நிலையில் இந்திய அமைச்சரின் விஜயம் தடைப்பட்டதாக அரசியல் மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.