கடலுக்கு அடியில் அமைக்கப்படும் நிரந்தர மனித இருப்பு

0
164

கடலுக்கு அடியில் வாழக்கூடிய வகையில் நிரந்தர மனித இருப்பு ஒன்றை உருவாக்க DEEP ரிசர்ச்சின் ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் குழு திட்டமிட்டுள்ளது.

அதன்படி, வேல்ஸ் நாட்டில் கடற்கரை அருகே கடல் மட்டத்திலிருந்து 660 அடிக்கு கீழே இந்த நிலையத்தை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடலின் சூரிய ஒளி மண்டலத்தில் 90 வீத கடல்வாழ் உயிரினங்களை ஆய்வு செய்ய ஆராய்ச்சியாளர்கள் இந்த தங்குமிடத்தை பயன்படுத்த முடியும் என்று விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளனர்.

Human presence under the sea
Human presence under the sea

ஆராய்ச்சியாளர்கள் மேற்பரப்பிற்கு வராமல் ஒரே நேரத்தில் 28 நாட்கள் இந்த தங்குமிடத்தில் வாழ முடியும் என்று DEEP ரிசர்ச் தெரிவித்துள்ளது.

இதேவேளை, DEEP ரிசர்ச் கடலில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் குறித்த ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.

கடலின் மேற்பரப்பில் இருந்து உயிரினங்களை ஆய்வு செய்வதை விட, அந்த கடல்வாழ் உயிரினங்களுடன் சேர்ந்து ஆய்வு செய்து, எவ்வாறான மாற்றம் ஏற்படும் என்பதை DEEP ரிசர்ச் நிரூபித்துள்ளது.

Human presence under the sea
Human presence under the sea

இதுவரை ஆராய்ச்சி செய்ததின் படி, எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் இதன் கட்டுமானப் பணிகளை முடிக்க எதிர்பார்ப்பதாக DEEP ரிசர்ச் தெரிவித்துள்ளது.

மேலும், குறித்த திட்டத்தின் தொடக்கத்தில், விஞ்ஞானிகள் ஒரு நேரத்தில் 28 நாட்கள் வரை 200 மீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் வாழ அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.