ஆசியக் கிண்ணம் போட்டி! சிக்சர் அடிக்க முயன்று கிளீன் போல்ட் ஆன பாகிஸ்தான் வீரர் காணொளி

0
278

ஆசியக் கிண்ணம் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான் – வங்கதேசம் அணிகள் மோதின. இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது பாகிஸ்தான் வீரர் இமாம் உல் ஹக்கின் அதிரடி ஆட்டம் தான். அவர் 4 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்கள் குவித்தார்.

இந்த நிலையில் மெஹிதி ஹசன் மிராஸ் வீசிய பந்தை சிக்சருக்கு அடிக்க இமாம் முயன்றார். ஆனால் பந்து நேராக ஸ்டெம்பை பதம் பார்த்ததால் கிளீன் போல்ட் ஆகி 78 ஓட்டங்களுடன் அவர் பெவிலியனுக்கு வெளியேறினார். இந்த காணொளி சமூகவலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது.