தூக்கத்திலேயே 160 கிலோமீட்டர் நடந்து சென்ற 11 வயது சிறுவன்!

0
200

அமெரிக்கா நாட்டில் 11 வயதான சிறுவன் ஒருவன், தூக்கத்தில் 160 கிலோ மீற்றர் தூரத்தை கடந்த நிகழ்வினை கின்னஸ் அமைப்பு பகிர்ந்துள்ளது.

தூக்கத்தில் நடப்பது என்பது அரிதான நோய் ஆகும். சிலருக்கு இந்த பாதிப்பு இருந்தால் சிறிது தூரம் தன்னை மறந்து நடந்து செல்வர் என்று கூறப்படுகிறது.

36 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் நடந்த அரிய நிகழ்வு ஒன்றை கின்னஸ் அமைப்பு தற்போது பகிர்ந்துள்ளது.

தூக்கத்திலேயே 160 கிலோமிற்றர் நடந்து சென்ற 11 வயது சிறுவன்! | 11 Year Old Boy Walked 160 Kilometers In His Sleep

1987ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் திகதி, இண்டியானா மாகாணம் பெருவைச் சேர்ந்த மைக்கேல் டிக்ஸன் என்கிற 11 வயது சிறுவன் தூக்கத்தில் நடந்து சென்றுள்ளார்.

ஆனால் அவர் 160 கிலோமீற்றர் தூரத்தை கடந்துள்ளார். காலில் காலணிகள் இல்லாமல் நடக்க துவங்கிய சிறுவன், வீட்டிற்கு அருகில் சரக்கு ரயிலில் ஏறி வெகு தொலைவிற்கு சென்றுள்ளார்.

ஒரு இடத்தில் இறங்கிய அவர் ரயில் தடத்தில் நடந்து சென்றுள்ளார். இது எதுவும் சிறுவனுக்கு நினைவில் இல்லை. 

ரயில்வே ஊழியர்கள் சிறுவன் நடந்து வருவதை கண்ட பின்னர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சிறுவனின் தாய் அவனை மீட்டுள்ளார்.

இது தொடர்பில் மருத்துவர்கள் கூறுகையில்,

‘இளம் வயதில் தூக்கத்தில் நடக்கின்ற வியாதி இருந்தாலும், குழந்தைகள் பெரியவர்கள் ஆனதும் அந்த வியாதி தாமாகவே மறைந்துவிடும்’ என தெரிவிக்கின்றன.