18 ஆண்டுகளாக முடங்கிய பெண்ணை பேசவைத்த AI தொழில்நுட்பம்..!

0
257

அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிகப்பட்ட பெண் நினைக்கும் விடயங்களை AI தொழில்நுட்ப உதவியால் வெளிக்கொணர்ந்த ஆச்சர்ய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அமெரிக்காவில் ஆன்(47) அன்ற பெண் 18 ஆண்டுகளுக்கு முன்பு மூளை தண்டுவட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் பேசவோ அல்லது டைப் செய்யவோ முடியாத நிலை நீடித்துள்ளது.

வியக்கவைத்த ஆராய்ச்சிக்குழு  

இந்நிலையில், இதனை ஆராய்ந்த ஆராய்ச்சிக்குழு அவரின் மூளையின் மேற்பரப்பில், 253 மெல்லிய காகித மின்முனைகளைப் பொருத்தியது. இதன் மூலம் இவரின் தனித்துவமான பேச்சு ஒலிகளின் வடிவங்களை, மூளை சமிக்ஞைகளாக வெளிப்படுத்தும்.

தொடர்ந்து, இதனை அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் AI அல்காரிதம் தொழில் நுட்பத்திற்கு, உரிய பயிற்சி தரப்பட்டுள்ளது.

18 ஆண்டுகளாக முடங்கிய பெண்ணை பேசவைத்த AI தொழில்நுட்பம் | Woman Paralyzed 18 Years Amazing Ai Technology

அதன்படி, இவரின் தனித்துவமான 39 ஒலிகள், சமிஞ்சைகளை சாட் ஜிபிடி பாணியில் கம்ப்யூட்டரானது மொழி வாக்கியமாக மாற்றும். முகபாவனை மற்றும் பேச்சை எழுத்து வடிவில் மாற்றும் போது, 28 சதவிகித வார்த்தைகள், டீகோடிங் எரர் ஆகலாம்.

மற்றவர்களுடன் கருத்தை வெளிப்படுத்த மிகவும் இயற்கையான வழியை உருவாக்குவதே எங்கள் குறிக்கோள்.

நோயாளிகளுக்கு இது உண்மையான தீர்வாக மாற்றும் பணியில் எங்களை மிகவும் நெருக்கமாகக் கொண்டு வருகிறது என கலிஃபோர்னியா பல்கலைக்கழக பேராசிரியர் எட்வர்ட் சாங் தெரிவித்துள்ளார்.