மத வழிபாடுகளை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

0
141

இந்த நாட்டில் மத வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“எமது நாடு ஜனநாயக நாடு. இங்கு இன, மத ரீதியில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட எவருக்கும் அனுமதி இல்லை.

மதச் சுதந்திரம்

எந்த மதத்தினரும் எங்கும் சென்றும் சுதந்திரமாக வழிபட முடியும். அந்த வழிபாடுகளைத் தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது.

இன, மத ரீதியில் வன்முறைகளைத் தூண்டும் வகையில் சிலர் வெளியிடும் கருத்துக்கள் அண்மைய நாட்களாக சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

இப்படியான நிலைமைக்கு நாம் இடமளிக்க முடியாது. சட்டம் தன் கடமையைச் செய்யும். அதன் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாது.” என தெரிவித்துள்ளார்.