கே.ஜீ.எப். திரைப்படப் பாணியில் TMVP மட்டக்களப்பில் செய்யும் அராஜகம்..

0
144

மட்டக்களப்பு மாநகரின் நடுவில் ஓடிக்கொண்டிருக்கும் வாவியினை இடைமறித்து இறால், மீன்வளர்ப்பு நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மீன்வளர்ப்பினை அவதானிக்க பல பகுதிகளில் ட்ரோன் கமராக்களை பறக்கவிட்டும்,சீசீடிவி பாதுகாப்பு கமராக்களை பொருத்தியுள்ளதாகவும் அடாவடியான செய்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கிராம பகுதியில் பெண்கள் அதிகளவு வாழ்ந்துவரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுத்தல் ஏற்படும் வகையில் அராஜகத்துடன் செயற்படுவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கேள்வியெழுப்பும் பொதுமக்களை துப்பாக்கியை காண்பித்து மிரட்டி கடுமையாக தாக்குவதாகவும், பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தும் எந்தவிதமான விசாரணையும் மேற்கொள்ளவில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

எனவே தாம் எதிர்நோக்கும் அச்சுறுத்தல்களுக்கு உரிய நடவடிக்கையினை மேற்கொண்டு தமக்கு உதவுமாறு பாதிக்கப்பட்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் உதவிகோரியுள்ளனர்.