குருந்தூர் மலை விவகாரம்; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உறுதி

0
193

குருந்தூர் மலையில் கடந்த 14-08-2023 ஆம் திகதி பொங்கலைத் தடுத்து குழப்பம் ஏற்படுத்தியவர்களுக்கு உடந்தையாகச் செயற்பட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை (14) குருந்தூர் மலையில் தமிழரின் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டது. அங்கு பொங்கலிட்டு வழிபட குருந்தூர்மலை விகாரை பெளத்த பிக்குவும் கும்பல் ஒன்றும் தடை ஏற்படுத்தியது.

நீதிமன்றத் தீர்ப்பை மீறும் வகையில் அமைந்த இவர்களின் செயலுக்குப் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி துணை நின்றிருந்தனர்.

குருந்தூர்மலை சம்பவம்: ஜனாதிபதி ரணில் எடுத்துள்ள அதிரடி முடிவு! | Kurundur Hill President Take Action Against Police

முல்லைத்தீவு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவரின் கண்காணிப்பின் கீழேயே இது முன்னெடுக்கப்பட்டது.

இவ் விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் நேற்று (18-08-2023) ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதன்போதே இந்த விடயம் தொடர்பில் முறைப்பாட்டை முழுமையாக தருமாறும், அந்தப் பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.