சிவகார்த்திகேயனின் ”மாவீரன்” திரைப்படத்தின் முதல் காட்சியை கண்டுகளித்த விஜய் மனைவி சங்கீதா

0
258

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கிய நிலையில் சென்னை ரோகிணி திரையரங்கிற்கு வந்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் சேர்ந்து படம் பார்த்தார்.

மண்டேலா என்ற வெற்றி படத்துக்கு பிறகு இந்தப் படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருப்பதால் மாவீரனுக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா மாவீரன் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை கண்டுகளிக்க திரையரங்கிற்கு வந்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.