நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு: சரத் வீரசேகர விளக்கம்

0
197

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் தான் ஒருபோதும் நடந்து கொள்ளவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்.

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சந்தர்ப்பத்தில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியை விமர்சிக்கும் வகையில் நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி சரத் வீரசேகர எம்.பி. கருத்து வெளிட்டிருந்தார்.

அவரது கருத்து நீதித்துறைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையான கண்டனம் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.

குற்றச்சாட்டு நிராகரிப்பு

அதற்குப் பதிலளிக்கும் வகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரத் வீரசேகர, சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில், சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த குற்றச்சாட்டை வன்மையாக நிராகரிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டு: சரத் வீரசேகர விளக்கம் | I Am Not In Contempt Of Court Sarath Weerasekhara

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது எனக்கு நன்கு தெரியும்.

ஜெனிவா சென்று வாதிட்டுள்ளேன்

குண்டர்களால் பௌத்த பாரம்பரியம் எவ்வாறு அழிக்கப்பட்டுள்ளது என்பதை வடக்கிற்குச் சென்று பார்க்குமாறு சட்டத்தரணிகள் சங்கத்திற்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

“நாங்கள் அனைவரும் நீதித்துறையை மதிக்கிறோம்” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உச்ச நீதிமன்றம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

அவர்மீதான அச்சம் அதற்கான காரணமா? இலங்கை நீதிமன்றங்கள் குறித்து வெளியிடப்பட்ட அவமதிப்பு மற்றும் கேவலமான செய்திகளை கண்டித்து நான் தானாகவே முன்வந்து ஜெனிவா சென்று வாதிட்டுள்ளேன் என்றும் சரத் வீரசேகர எம்.பி. தனது கடிதத்தில் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.