மனித புதைகுழியில் வெடிகுண்டுகள் பற்றி வெளியானது  பொய்யான செய்தி

0
161

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வின்போது புதைகுழியில் இருந்து சில வெடிகுண்டுகள் மற்றும் தோட்டாக்கள் (துப்பாக்கி ரவைகள்) கண்டெடுக்கப்பட்டதாக பத்திரிகைகள் சில போலியான செய்திகளை வெளியிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி வெளியான இரு சிங்கள மொழி பத்திரிகைகளே இவ்வாறு போலியான செய்திகளை வெளியிட்டிருப்பதாக Factseeker டுவிட் செய்துள்ளது.

இது தொடர்பில் Factseeker பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் வினவியபோது

இந்த மனித புதைகுழி அகழ்வின்போது அவ்வாறான வெடிகுண்டுகளோ வெடிமருந்துகளோ அல்லது துப்பாக்கி ரவைகள் கண்டெடுக்கப்படவில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த அகழ்வுப்பணிகள் கடந்த 6 ஆம் திகதி மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதாகவும் 8 ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.

இந்த புதைகுழிகளை மீண்டும் தோண்டுவது தொடர்பில் எதிர்காலத்தில் கலந்துரையாடப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.