EPF நிதி குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

0
138

தேசிய கடன் மறுசீரமைப்பின் மூலம் ஊழியர்களின் சேமலாப நிதிக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், சேமலாப நிதிக்கு குறைந்தபட்ச வட்டி 09 சதவீதமாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலும், விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படுமென தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தேசிய கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதன் மூலம் ஊழியர்களின் சேமலாப நிதியத்தியின் மீதான தாக்கம் எவ்வாறு அமையுமென்பது குறித்து ஜனாதிபதி மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடல், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதுடன், ஊழியர்களின் EPF நிதிக்கு குறைந்தபட்ச வட்டி வீதத்தை 09 சதவீதமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

09 சதவீதம் வட்டி 

EPF நிதி குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை! சட்டத்தில் திருத்தம் | Employees Provident Fund Sri Lanka

இதனால், ஊழியர் சேமலாப நிதியத்துக்கு குறைந்தபட்ச வட்டியாக 09 சதவீதம் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான சட்டத்தை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி இதன்போது அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி அடுத்த மூன்று வருடங்களுக்கு ஊழியர் சேமலாப நிதியத்துக்கு குறைந்தபட்ச வட்டி வீதம் 09 சதவீதமாக வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஊழியர் சேமலாப நிதிச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென்று அமைச்சர் மனுஷ நாணயக்கார குறிப்பிட்டார்.

இதற்கமைவாக ஊழியர் சேமலாப சட்டமூலத்தில் திருத்தத்தை கொண்டு வருவதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தை விரைவாக பெற்று அந்த திருத்தம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.