சர்ச்சைக்குரிய யாழ்.தையிட்டி விவகாரம்; களமிறங்கும் கஜேந்திரன்

0
183

தையிட்டி விகாரைக்கு அண்மையில் வழமை போன்று போராட்டத்தில் ஈடுபடுவதற்கு  ஒன்று கூடுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் போராட்டமானது இன்று (02.07.2023) மற்றும் நாளை (03.07.2023) ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது.

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் விகாரை  அமைக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய யாழ்.தையிட்டி விவகாரம்: மீண்டும் களமிறங்கும் செ.கஜேந்திரன் | Jaffna Thaiyitti Protest

வழமையாக போராட்டம் 

அந்த சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராகவும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு அனைவரையும் தையிட்டி விகாரைக்கு அண்மையில் வழமையாகப் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒன்று கூடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.