நாட்டின் வங்குரோத்து நிலைக்கு 225 உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும்!

0
226

நாடு வங்குரோத்து நிலையடைந்துள்ளமைக்கு 225 உறுப்பினர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், கடன் பெற்ற அரசாங்கங்களின் அமைச்சரவையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் இன்று ஆளும், எதிர்க்கட்சி பக்கம் உள்ளார்கள். கடன் மறுசீரமைப்பு திட்டத்தைத் தவிர்த்து சிறந்த மாற்றுத்திட்டத்தை முன்வைத்தால் ஜனாதிபதியிடம் கலந்துரையாடி அதனை விரைவாகச் செயற்படுத்தத் தயார்  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (01.07.2023) இடம்பெற்ற தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நாடு பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது, வங்குரோத்து நிலை அடைந்தது என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

பொருளாதார பாதிப்பு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்திய போது வெஸ்மினிஸ்டர் முறைமைக்கு அமைய அரசாங்கத்தைப் பொறுப்பேற்குமாறு எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.