3 உயர்ஸ்தானிகர்களும் 7 தூதுவர்களும் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளிப்பு

0
196

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மூவரும் தூதுவர்களும் ஏழு பேரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தங்களது நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர்.

கண்டி ஜனாதிபதி மாளிகையில் இன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது.

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் திரினிடாட் மற்றும் டொபாகோ குடியரசு, உகண்டா குடியரசு மற்றும் சீஷெல்ஸ் குடியரசு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இதேவேளை, பனாமா குடியரசு, பெல்ஜியம், ஹெலனிக் குடியரசு, சிரிய அரபுக் குடியரசு, பெரு குடியரசு, கொரியா குடியரசு மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளுக்கான தூதுவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர்கள் மற்றும் தூதுவர்களின் பெயர் விவரம் வருமாறு:

1 . கலாநிதி . ரொஜர் கோபால் – திரினிடாட் டொபாகோ குடியரசின் உயர் ஸ்தானிகர் – (புது டில்லி)

 Dr. Roger Gopaul

Dr. Roger Gopaul Photo Credit – President Media Division

2 . பேராசிரியர் ஜாய்ஸ் கே. கிகாபண்டா – உகண்டா குடியசின் உயர்ஸ்தானிகர் – (புது டில்லி)

Prof. (Ms.) Joyce K. Kikafunda

Prof. (Ms.) Joyce K. Kikafunda Photo Credit – President Media Division

3 . லாலாட்டியானா அக்கோச் – சீஷெல்ஸ் குடியரசு உயர்ஸ்தானிகர் – (புது டில்லி)

Mrs. Lalatiana Accouche

Mrs. Lalatiana Accouche Photo Credit – President Media Division

4 . எலிஜியோ எல்பர்டோ சலாஸ் டி லியோன் – பனாமா குடியரசின் தூதுவர் – (ஹா நோய் – Ha Noi)

Mr. Eligio Alberto Salas De Leon

Mr. Eligio Alberto Salas De Leon Photo Credit – President Media Division

5. டிடியர் வாண்டர்ஹாசெல்ட் – பெல்ஜியம் இராச்சியத்தின் தூதுவர் (புது டில்லி)

Mr. Didier Vanderhasselt

Mr. Didier Vanderhasselt Photo Credit – President Media Division

6 . டிமிட்ரியோஸ் ஐயோனோவ் – ஹெலனிக் குடியரசின் தூதுவர் – (புது டில்லி)

Mr. Dimitrios Ioannou

Mr. Dimitrios Ioannou Photo Credit – President Media Division

7 . கலாநிதி பஸ்ஸாம் அல்-காதிப் – சிரிய அரபுக் குடியரசு தூதுவர் – (புது டில்லி)

Dr. Bassam Al-Khatib

Dr. Bassam Al-Khatib Photo Credit – President Media Division

8 . ஜேவியர் மானுவல் பாலினிச் வெலார்டே – பெரு குடியரசு தூதுவர் – (புது டில்லி)

Mr. Javier Manuel Paulinich Velarde

Mr. Javier Manuel Paulinich Velarde Photo Credit – President Media Division

9 . லீ மியோன் – கொரியா குடியரசு தூதுவர் – கொழும்பு

 Ms. Lee Miyon

Ms. Lee MiyonPhoto Credit – President Media Division

10 .இஸ்டிவான் ஷப்போ – ஹங்கேரி தூதுவர் – (புது டில்லி)

Mr. István Szabó

Mr. István SzabóPhoto Credit – President Media Division

ஜனாதிபதி ஊடக பிரிவு