லித்தியம் பேட்டரி கண்டுபிடித்த விஞ்ஞானி மரணம்!

0
203

லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி ஜான் குட்எனப் வயது மூப்பு காரணமாக 100-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

இதேவேளை செல்போன், கணினி மற்றும் மின்சார கார்கள் வரையிலான சாதனங்களுக்கு ரீசார்ஜபிள் ஆற்றலுடனான லித்தியம்-அயன் பேட்டரியை உருவாக்கியதற்காக 2019-ம் ஆண்டு ஜான் குட்எனஃப் நோபல் பரிசு பெற்றார்.

மேலும், வேதியியலுக்கான இந்த நோபல் பரிசை அமெரிக்காவின் எம்.ஸ்டான்லி விட்டிங்ஹாம், ஜப்பானின் அகிரா யோஷினோ ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.

1980-ம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ஜான் குட்எனஃப் லித்தியம் அயன் பேட்டரியை கண்டுபிடித்தார்.

லித்தியம் பேட்டரியை கண்டுபிடித்த விஞ்ஞானி உயிரிழந்தார்! | Scientist Who Invented The Lithium Battery Died

1922-ம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த அவர் அமெரிக்காவில் வளர்ந்தார். யேல் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்றார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

இரண்டாம் உலகப் போரில் அமெரிக்காவின் வானிலை ஆய்வாளராக பணியாற்றினார்.

2011-ம் ஆண்டு ஜான் குட்எனஃப்புக்கு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அறிவியலுக்கான குடியரசு தலைவர் பதக்கம் வழங்கி கவுரவித்தார்.

ஜான் குட்எனஃப் கண்டுபிடித்த லித்தியம்-அயன் பேட்டரி, தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.