டொலரின் மதிப்பு வீழ்ச்சி! மருந்துகளின் விலை குறைப்பு

0
155

இலங்கையில் பலவகையான மருந்துகளின் விலைகள் குறைக்கப்படவுள்ளன. இந்த விலை குறைப்பானது இன்றைய தினம் முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல்

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவினால் வெளியிடப்பட்டுள்ளது. புதிய விலை திருத்தத்தின் பிரகாரம் 60 வகையான மருந்துகளுக்கு 16% விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி! இன்று முதல் இலங்கையில் நடைமுறைக்கு வரும் விலை குறைப்பு | Medicines Price Reduce In Sri Lanka

சில மருந்துகளின் விலைகள்

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், 500 மில்லிகிராம் பரசிட்டமோல் மாத்திரை ஒன்றின் விலை 3 ரூபா 49 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளதுடன், இன்சுலின் 10 மில்லிகிராம் குப்பியின் அதிகபட்ச சில்லறை விலை 2270 ரூபா 2 சதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், 375 மில்லிகிராம் அமோக்ஸிலின் கிளாவுலினிக் அமிலத்தின் அதிகபட்ச சில்லறை விலை 70 ரூபா 32 சதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. 

டொலரின் பெறுமதி வீழ்ச்சி! இன்று முதல் இலங்கையில் நடைமுறைக்கு வரும் விலை குறைப்பு | Medicines Price Reduce In Sri Lanka