மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் யாழில்  நடைபவனி முன்னெடுப்பு

0
185

மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையிலான நடைபவனியொன்று யாழ் மாவட்ட சர்வமதக் செயற்குழுவினால் இன்று(20.06.2023) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நடைபவனியானது அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் (SOND) ஏற்பாட்டில் இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பித்து வைத்தியசாலை முன் வீதியூடாக நூலகத்தை வந்தடைந்தது.

இதன் போது தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெகான் பெரேரா, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் மோகனதாஸ், அபிவிருத்திக்கான சமூக அமைப்புகளின் வலையமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ச. செந்தூராசா மற்றும் நான்கு மதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி மதகுருமார் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

வடக்கு கிழக்கில் மத குழப்பம்

மத நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையிலான நடைபவனியொன்று யாழில் முன்னெடுப்பு(Photos) | Walking To Create Religious Rally

அண்மைக்காலமாக வடக்கு கிழக்கில் மதரீதியான முருகல்கள் அதிகரித்து வரும்நிலையில், இவ்வாறான நல்லிணக்க செயற்பாடுகள் மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை உருவாக்கும் என சர்வமதக் செயற்குழுவினால் முன்மொழியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery
Gallery