பிரித்தானியாவில் தமிழர் தாயகத்தில் தொடரும் இனவழிப்புக்கு எதிரான மாநாடு

0
294

தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட வகையில் கட்டமைக்கப்பட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்புக்கு நீதி கோரியும் அதனை தடுத்து நிறுத்த கோரியும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தமிழர் தரப்பினர் மாநாடு ஒன்றினை நடத்தியுள்ளனர்.

நேற்று (14.06.2023) மாலை 4.30 தொடக்கம் பிரித்தானியா நாடாளுமன்ற வளாகத்தில் இந்த மாநாடு இடம்பெற்றுள்ளது.

சிறப்பாக தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழிச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகள் மற்றும் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாகிய வி.எஸ்.எஸ். தனஞ்சேயன் கலந்து கொண்டனர்.

பிரித்தானியாவில் செயற்பாட்டுக் கொண்டிருக்கும் தேசிய செயற்பாட்டு அமைப்புகளின் அனுசரணையுடன் Tamils for Conservative, Tamils for Labor அமைப்புகளின் ஏற்பாட்டில் இம்மாநாடு நடைபெற்றது.

மாநாட்டில் Mr.Patrick Louise (Barrister for Human Rights) ஜனனி ஜனநாயகம் மனித உரிமைச் செயற்பாட்டாளர், பணிப்பாளர் Against Genocide ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாக இணைந்து கொண்டனர்.

தொடர்ந்து மாநாட்டுக்கு வருகை தந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் ஆகிய Mr John McDonald’s MP, Mr Virendra Sharma MP, Lib Democratic Leader Sir Ed Davey MP, Ms Sarah Jones – (MP and Shadow Minister of State for Police and the Fire Service), Mr Sam Tarry MP, Mr Gareth Thomas MP – (Shadow Minister for International Trade) ஆகியோர் தமது கருத்துரைகளை வழங்கியதை தொடர்ந்து இனவழிப்புக்கான தீர்மானத்தினை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கான முனைப்புகளில் ஈடுபடுவதாகவும் வாக்குறுதி அளித்திருந்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துரைகளை தொடர்ந்து நன்றியுரையை செல்வன்.கஜீவன் வழங்கியுள்ளார். தமிழரின் நீண்ட நெடிய விடுதலைப் பயணத்தின் ஓர் மைல் கல்லாக  இம்மாநாடு அமைந்துள்ளதாக நம்பப்படுகின்றது.