மூளைச்சாவு அடைந்தவர்களின் உறுப்புகளை தானம் செய்யுங்கள்: மருத்துவ நிபுணர் வேண்டுகோள்

0
185

மூளைச்சாவடைந்து இறந்தவரின் சிறுநீரகத்தினை தானமாக வழங்குவதற்கு உறவினர்கள் முன்வர வேண்டும் என சிறுநீரக வைத்திய நிபுணர் எஸ்.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகளுக்கு இடையில் இடம் பெறவுள்ள ஊடக சந்திப்பிலே இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

திடீரென ஏற்படும் விபத்து மற்றும் சில நோய் காரணமாக மூளை சாவடைந்து இறந்தவர்களின் இதயம் சில மணி நேரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும்போது அவர்களது சிறுநீரகத்தினை அறுவைச் சிகிச்சை மூலமாக தேவைப்படும் ஒருவருக்கு பொருத்த முடியும்.

அவ்வாறு சிறுநீரகம் தேவைப்படுகின்ற ஒருவருக்கு பொருத்துவதற்கு மூளை சாவடைந்து இறந்தவரின் உறவினர்கள் முன்வந்தால் இன்னொரு உயிரை காப்பாற்றும் சந்தர்ப்பம் ஏற்படும்.

சிறுநீரக செயலிழப்பு

எனவே அவ்வாறு சிறுநீரகத்தை தானம் தருவதற்கு பொதுமக்கள் மூளைச்சாவடைந்தோரின் உறுப்புக்களை தானம் செய்ய முன்வர வேண்டும் வைத்திய நிபுணரின் கோரிக்கை.

கடந்த காலங்களில் சிறுநீரகம் செயலிழந்த ஒருவருக்கு சிறுநீரகத்தை பொருத்துவதற்காக கண்டி வைத்தியசாலை வைத்திய நிபுணர்கள் சிலர் சிறுநீரகத்தை பெற்று தருவதற்கான உதவியினை வழங்கியிருக்கிறார்கள்.

எனவே இது தொடர்பான விழிப்புணர்வு பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் ஏனைய பொதுமக்கள் மத்தியிலும் ஏற்படுத்தி பிற உயிரை வாழ வைக்கும் சந்தர்ப்பத்தினை ஏற்படுத்த முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.