மொட்டு கட்சியின் பட்டியல்! ஜனாதிபதியிடமிருந்து சென்ற தனிப்பட்ட அறிவிப்பு

0
143

அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு வழங்கப்பட்ட பரிந்துரை பட்டியலில் குறிப்பிடப்பட்ட சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்க முடியாது என்று ஜனாதிபதி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சம்பந்தப்பட்ட சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் அமைச்சுப் பதவி வழங்கப்படாவிட்டாலும், அவர்களின் அரசாங்கத்துடனான ஒத்துழைப்பு மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்று அவர்களுக்கு கூறப்பட்டுள்ளதாகவும் அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.