வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள்! 83,000 பேருக்கு  ஏற்பட்ட நிலை – தினேஷ் குணவர்தன

0
283

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தந்தையின் ஆட்சிக் காலத்தில் சிறு சம்பள அதிகரிப்பைக் கோரி வேலை நிறுத்தப் போராட்டம் செய்தமைக்காக 83,000 பேர் வீட்டிற்கு அனுப்பப்பட்டதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் எமது அரசாங்கத்தில் அவ்வாறு எந்தப் பழிவாங்கல்களுக்கும் இடம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (08.06.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவரது தந்தையார் ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள் அனைவரும் வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள். கொத்துக் கொத்தாக அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர்.

சிறு சம்பள அதிகரிப்பை கோரி வேலை நிறுத்தப் போராட்டம் செய்தமைக்காக 83000 பேர் அவ்வாறு வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.