ஜலானி பிரேமதாச அரசியலுக்கு வருவாரா?

0
145

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் பாரியாரான ஜலனி பிரேமதாச தொடர்பில் அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதோடு அவர் அரசியலுக்கு வரப்போகின்றார் எனவும், ஐக்கிய மக்கள் சக்தியை அவரே கட்டுப்படுத்துகின்றார் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜலனி பிரேமதாசவுடன் பேச்சு நடத்தியுள்ளனர்.

இதன்போது தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று ஜலனி பிரேமதாச தெரிவித்துள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.