இளமையாக இருக்க 17 வயது மகனின் இரத்த பிளாஸ்மாவை உடலில் செலுத்திய தந்தை!

0
333

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் என்றும் இளமையாக இருக்க பிளாஸ்மா ஸ்வாப்பிங் முறையில் தனது மகனின் ரத்த பிளாஸ்மாவை எடுத்து தனக்கு செலுத்தி கொண்டார்.

இந்நிலையில் 45 வயதான பிரையன் ஜான்சன் 70 வயதான தனது தந்தை ரிச்சர்ட் மற்றும் 17 வயது மகனான டால்மேஜ் ஆகியோருடன் டெக்சாஸில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார்.

இளமையாக இருக்க 17 வயது மகனின் ரத்த பிளாஸ்மாவை தனது உடலில் செலுத்தி கொள்ளும் தந்தை! | Father Injects 17 Year Old Son Blood Plasma Body

அங்கு டால்மேஜ் உடலில் இருந்து ஒரு லிட்டர் ரத்தம் எடுக்கப்பட்டு அதில் இருந்து பிளாஸ்மா பிரித்து எடுக்கப்பட்டு தந்தையான பிரைன் ஜான்சனுக்கு செலுத்தப்பட்டது.

இதேபோல், பிரைன் ஜான்சன் உடலிலிருந்தும் பிளாஸ்மா பிரித்து எடுக்கப்பட்டு ரிச்சர்ட் உடலில் செலுத்தப்பட்டது.

ஆண்டுதோறும் பல மில்லியன் டாலர்களை செலவழித்து இதனை செய்து வருவதாக கூறும் பிரையன் இதற்காக உணவு, உடற்பயிற்சி, உறக்கத்தில் கவனம் செலுத்துவதாக அவர்கள் கூறியுள்ளார். 

இளமையாக இருக்க 17 வயது மகனின் ரத்த பிளாஸ்மாவை தனது உடலில் செலுத்தி கொள்ளும் தந்தை! | Father Injects 17 Year Old Son Blood Plasma Body