ஆன்லைனில் விஷம் வாங்கி அருந்தி குழந்தைகள் தற்கொலை: கனேடிய பொலிஸாருக்கு பெற்றோர் வேண்டுகோள்!

0
214

பிரித்தானிய பிள்ளைகள் சிலர் கனேடியர் ஒருவரிடமிருந்து இரசாயனம் ஒன்றை ஒன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அந்தப் பிள்ளைகளின் பெற்றோர் அந்த இரசாயனம் கிடைப்பதைக் கட்டுப்படுத்துமாறு கனேடிய பொலிசாரிடம் கண்ணீர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி இங்கிலாந்தின் சர்ரேயில் வாழ்ந்து வந்த Neha Susan Raju என்னும் இளம்பெண், இணையம் வாயிலாக இரசாயனம் ஒன்றை வாங்கி உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஒன்லைனில் விஷம் வாங்கி தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகள் : கனேடிய பொலிசாருக்கு பெற்றோர் கோரிக்கை | Children Commit Suicide By Buying Poison Online

2021 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள ஹொட்டல் ஒன்றில் Tom Parfett (22) என்னும் இளைஞர் அதே ரசாயனஇரசாயனத்தின் உதவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.

2019க்கும் 2020க்கும் இடையில் ஒன்ராறியோவில் இதேபோல அதே இரசாயனத்தைப் பயன்படுத்தி குறைந்தது 23 பேர் தற்கொலை செய்து கொண்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. 

ஒன்லைனில் விஷம் வாங்கி தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகள் : கனேடிய பொலிசாருக்கு பெற்றோர் கோரிக்கை | Children Commit Suicide By Buying Poison Online

இந்த உயிரிழப்புகளுக்கு காரணமான அந்த இரசாயனம் ஒன்ராறியோவை மையமாகக் கொண்ட Kenneth Law என்னும் கனேடியரின் இணையதளம் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக The Times பத்திரிகை தெரிவித்துள்ளது. தனது தயாரிப்புகளை உலகம் முழுமைக்கும் அனுப்பி வருவதாக அந்த இணையதளத்தில் பெருமையாக விளம்பரமும் செய்துள்ளார் Kenneth Law.

அந்த ரசாயனம் மட்டும் தன் பிள்ளை கையில் கிடக்காமலிருந்திருந்தால் தன் மகன் இப்போது உயிரோடு இருந்திருப்பான் என்கிறார் Tomஇன் தந்தையான David Parfett.

ஒன்லைனில் விஷம் வாங்கி தற்கொலை செய்துகொண்ட பிள்ளைகள் : கனேடிய பொலிசாருக்கு பெற்றோர் கோரிக்கை | Children Commit Suicide By Buying Poison Online

David Parfett

ஆக, பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர் கனடாவும் பிரித்தானியாவும் இப்படிப்பட்ட விஷப் பொருட்கள் பிள்ளைகள் கையில் கிடைக்காமல் தடுக்கும் வகையில் சட்டங்களில் மாற்றங்கள் செய்யுமாறு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Children commit suicide after consuming poison online: Parents plead with Canadian police