தந்தையான ‘ஹாரிபாட்டர்’ படத்தின் கதாநாயகன்

0
228

‘ஹாரி பாட்டர்’ பட கதாநாயகன் டேனியல் ராட்க்ளிஃப் மற்றும் அவரது நீண்டகால காதலியான நடிகர் எரின் டார்க் ஆகியோர் தங்களது முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் குழந்தையின் பாலினத்தையோ அல்லது குழந்தை எப்போது பிறந்தது என்பதையோ வெளிப்படுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தந்தையான

டேனியல் ராட்க்ளிஃப்.

தனது 11 வயதிலேயே படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து அதன் 8 பாகங்களிலும் நடித்து தனது வாலிப பருவத்தை இதுனுடனே கழித்துள்ளார்.

2013ம் ஆண்டு வெளியான கில் யுவர் டார்லிங்ஸ் படத்தில் இணைந்து நடித்த நடிகையுடன் காதல் செய்து வந்துள்ளார்.

இவர் தனது காதலியிடன் 10 வருடமாக திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்த வந்துள்ளார். இந்நிலையில் தனது காதலி கர்ப்பமாக உள்ள செய்தியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.