பாரம்பரிய உணவு தேடி யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்த மக்கள்!

0
263

யாழில் பாரம்பரிய உணவு திருவிழாவானது மிகவும் சிறப்பாக 100க்கும் அதிகளவான மக்களின் வரவேற்புடன் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

இந்த உணவு திருவிழாவானது கடந்த 15ஆம் மற்றும் 16 ஆம் திகதிகளில் யாழ். முற்றவெளி அரங்கில் இடம்பெற்றது.

குறித்த உணவு திருவிழாவில் சுயதொழில் செய்யும் ஆண் முயற்சியாளர்கள் முதல் கொண்டு குடும்பத்தை தலைமை தாங்கி நடத்தும் பெண் சுயதொழில் முயற்சியாளர்கள் என அனைவரும் தமது உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்தனர்.

அங்கு குரக்கன் புட்டு, ஒடியல் கூழ், கீரை வடை, கஞ்சி மற்றும் பனங்காய் உணவு வகைகள் என சத்தானதும் பாரம்பரியமானதுமான பல உணவு வகைகளை பார்வையிட சென்றோர் வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.

மேலும், உணவு வகைகள் பெரும்பாலும் உடனடியாக அவ்விடத்தில் சுட சுட ஆரோக்கியமான முறைப்படியும் சுத்தமாகவும் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

என்னதான் உலகம் இன்று கணினி மயப்படுத்தப்பட்டு இருந்தாலும் இன்றும் மக்கள் பாரம்பரியத்தையும் பழமையினையும் நாடி செல்வது என்னவோ நிதர்சனமாகவே தான் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாரம்பரிய உணவை தேடி படையெடுத்த மக்கள்! | People Invading Jaffna Search Of Traditional Food