22,000 அடி உயரத்தில் பறக்கும் கமல்ஹாசன்! வைரலான புகைப்படம்

0
198

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் (Shankar Shanmugam) இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் (Kamal Haasan) இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

விமானத்தை 22,000 அடி உயரத்தில் செலுத்தும் கமல்ஹாசன்! வைரலாகும் புகைப்படம் | Kamal Haasan Piloting The Plane At 22 000 Feet

படத்தின் இறுதி சண்டைக்காட்சி படப்பிடிப்பு நேற்றைய தினம் முதல் அங்குப் படமாக்கப்படுகிறது. தீவிர படப்பிடிப்பு அட்டவணையைத் தொடங்குவதற்கு முன்பு கமல்ஹாசன் தென்னாப்பிரிக்காவில் ஒரு நாள் ஓய்வெடுத்தார்.

இன்ஸ்டாகிராமில் அவர் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

விமானத்தை 22,000 அடி உயரத்தில் செலுத்தும் கமல்ஹாசன்! வைரலாகும் புகைப்படம் | Kamal Haasan Piloting The Plane At 22 000 Feet

அங்கு அவர் ஒரு விமானியுடன் விமானத்தில் பறக்கிறார். அவர் ஒரு படத்தைப் பகிர்ந்து “22,000 அடி உயரத்தில் ஒன்றாக பறக்கிறோம்!” என அதற்குத் தலைப்பிட்டுள்ளார்.

அவரது பதிவிற்கு கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள் கமல்ஹாசனால் முடியாதது ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளனர். இதேவேளை, ‘பஞ்சதந்திரம்’ படத்தில் கமல்ஹாசன் விமானியாக நடித்ததையும் சிலர் நினைவு கூர்ந்தனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என்றும், படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், காளிதாஸ் ஜெயராம், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, சித்தார்த், குரு சோமசுந்தரம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும் இப் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்து வருகின்றார்.