கொழும்பில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் தனியார் வைத்தியசாலை ; எச்சரிக்கை

0
187
An African female Patient being pushed off to surgery by a doctor and a nurse in scrubs from a full hospital ward in Cape Town South Africa

கொழும்பின் புறநகர் பகுதியான தெஹிவளையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலைக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட பிரிவின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி தெரிவித்துள்ளார்.

டெங்கு என்டிஜன் மற்றும் முழுமையான இரத்த பரிசோதனைக்காக நோயாளிகளிடம் இருந்து மேலதிகமாக 1,350 ரூபா பணம் வசூலித்த குற்றச்சாட்டின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள அதிகூடிய அபராதம்

கொழும்பில் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் தனியார் வைத்தியசாலை - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Colombo Hospital Cheating People

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் தனியார் வைத்தியசாலை அல்லது ஆய்வகத்திற்கு விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

டெங்கு பரிசோதனைக்கு வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த 1200 ரூபாவுக்கும் அதிகமாகவும் 2500 ரூபாவும், இரத்த பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட 400 ரூபாவுக்கு மேல் 550 ரூபாயும் குறித்த தனியார் வைத்தியசாலை நோயாளிகளிடம் வசூலித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த வைத்தியசாலைக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.