மூன்று பெண் சக ஊழியர்களை பாலியல் பலாத்காரம் செய்த ஊழியர்

0
342

மூன்று சக ஊழியப் பெண்களை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக காப்புறுதி நிறுவனம் ஒன்றின் முகாமையாளர் மற்றும் ஊழியர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பொலிஸ் பிரிவின் பெண்கள் மற்றும் சிறுவர் பணியகம் குறித்த சம்பவம் தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 33 மற்றும் 45 வயதானவர்களாவர்.

புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தபட்ட பின் சந்தேக நபர்கள் இருவரும் தலா 500, 000 ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 

மூன்று சக பெண்களை பலாத்காரம் செய்த ஊழியர் | Employee Who Raped Three Female Colleagues