அனைத்து ஆளுநர்களும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான அமைச்சர் என்ற வகையில் பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களுக்கான பதவிகாலத்தை ஒரு வருடத்திற்கு நீடித்து பிரதமரால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. இதற்கமைய எதிர்வரும் 19 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றங்களுக்கான பதவிகாலம் நிறைவடையவுள்ளது.

இந்த நிலையில் உள்ளுராட்சி மன்றங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாட மாகாண ஆளுநர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் பதவிகாலம் எதிர்வரும் 19 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளமையினால் உள்ளுராட்சி மன்றங்களை ஆணையாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.