இலங்கை – இந்திய பாதுகாப்புக்கு புதிய வழிகள் அடையாளம்!

0
204

இலங்கை – இந்தியா இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மதிப்பாய்வு செய்யும் மற்றும் ஈடுபாட்டிற்கான புதிய வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய – இலங்கையின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் வருடாந்த உரையாடலின் 7 பதிப்பை நடத்திய வேளையில் இந்த புதிய வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை - இந்தியா பாதுகாப்பிற்கு அடையாளம் காணப்பட்ட புதிய வழிகள்! | New Routes Identified For Sri Lanka India Defense

இந்தியா – இலங்கை இடையிலான வருடாந்த பாதுகாப்பு உரையாடலின் 7 வது பதிப்பின் 2 நாள் கூட்டம் கடந்த வியாழக்கிழமை (23-02-2023) டெல்லியில் ஆரம்பித்து நேற்று சனிக்கிழமை (25-02-2023) நிறைவடைந்தது.

இந்திய தரப்புக்கு பாதுகாப்பு செயலாளர் கிரிதர் அர்மானேயும் இலங்கை தரப்புக்கு பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்னவும் (Kamal Gunawardena) தலைமை தாங்கினர்.

இலங்கை - இந்தியா பாதுகாப்பிற்கு அடையாளம் காணப்பட்ட புதிய வழிகள்! | New Routes Identified For Sri Lanka India Defense

இந்த நிலையில் குறித்த கலந்துரையாடலின்போது பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தரப்பும் ஆய்வு செய்ததாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பல்வேறு பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்முயற்சிகள் கூட்டாக மதிப்பாய்வு செய்யப்பட்டு, ஈடுபாட்டிற்கான புதிய வழிகளும் இதன்போது அடையாளம் காணப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் குறிப்பிட்டுள்ளது..