முட்டை 30 ரூபாவுக்கு வழங்கப்படுமாயின் கேக் விலை குறைக்கப்படும்

0
346

முட்டை ஒன்றை வெதுப்பக தொழில் துறையினருக்கு இறக்குமதி செய்யப்படும் 30 ரூபாவுக்கு வழங்கப்படுமாயின் கேக்கின் விலையை குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்த முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனை தெரிவித்தார்.

இருப்பினும், பாண் உள்ளிட்ட ஏனைய வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் கேக் 1,200 ரூபா முதல் 1,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்ற பின்னணியில்  வெளியாகியுள்ளது.

இலங்கையில் கேக் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! | Reduction In Price Of Cake In Sri Lanka

இறக்குமதி செய்யப்படும் முட்டை ஒன்றை 30 ரூபாவுக்கு தொழில் துறையினருக்கு வழங்க முடியும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய (Ranjith Siyambalapitiya) முன்னதாக தெரிவித்திருந்தார்.

அவிஸ்ஸவாளை பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், உள்நாட்டு முட்டைகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளமையினால் இந்தியாவிலிருந்து 20 லட்சம் முட்டைகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.