யாழ் ஹோட்டலில் தங்கிய இந்திய புதுமண தம்பதிகள்; இணையத்தில் வெளியான புகைப்படங்களால் அதிர்ச்சி!

0
101

யாழ். ஹோட்டல் ஒன்றில் தங்கிய இந்தியாவைச் சேர்ந்த திருமண ஜோடி ஒன்றின் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் அறைகளில் ரகசிய கமரா பொருத்தப்பட்டு அங்கு நடக்கும் விடயங்கள் பொதுவெளியில் பகிரப்பட்டு வருவதாக யாழ் சுற்றுலா வழிகாட்டிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

யாழ். ஹோட்டல் ஒன்றில் தங்கிய திருமண ஜோடி; இணையத்தில் வெளியான காட்சியால் அதிர்ச்சி! | Couple Staying At A Hotel Published Internet

அதுமட்டுமல்லாது அறைக்குள் நடக்கும் காட்சிகளை யாழ்ப்பாண இளைஞர்களுக்கு நேரலையில் காட்டி பணம் பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட வேலை ஏற்பாடு பற்றியும் யாழ் சுற்றுலா வழிகாட்டிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இரகசிய கமராக்கள் பொருத்துவதற்கு எதிர்ப்பு

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் ஒன்றின் பல அறைகளில் இரகசிய கமராக்கள் பொருத்தப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் அதிகாரிகளிடம் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளது.

யாழ். ஹோட்டல் ஒன்றில் தங்கிய திருமண ஜோடி; இணையத்தில் வெளியான காட்சியால் அதிர்ச்சி! | Couple Staying At A Hotel Published Internet

இந்த சுற்றுலா விடுதி ஒன்றில் சமீபத்தில் திருமணமான இந்தியாவை சேர்ந்த இளம் ஜோடி ஒன்று வந்து தங்கியிருந்த நிலையில் அவர்களின் அந்தரங்க நிகழ்வுகளை ரகசிய கேமராக்கள் மூலம் படம் எடுத்துள்ளதாகவும் சங்கத்தின் செயலாளர் சி.கார்த்திகன் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் கூட சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பரப்பப்பட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ள செயலாளர் இந்த நிலைமையால் யாழ்ப்பாணத்தில் உள்ள சுற்றுலா வழிகாட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சுற்றுலா ஹோட்டல்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குழுவொன்று இரகசிய கமெராக்களின் உதவியுடன் பெறப்படும் காட்சிகளை யாழ்ப்பாண இளைஞர்களுக்கு நேரலையில் காட்டி பணம் சம்பாதிப்பதாக ஒரு வதந்தி நிலவுவதாகவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை இவ்வாறான சம்பவங்களால் யாழிற்கு வருகை தருவோர் சுற்றுலா ஹோட்டல்களில் தங்குவதற்கு தயக்கம் காட்டுவதாகவும் இதனால் சுற்றுலாதுறை வளர்ச்சி பின்தள்ளப்படுவதாகவும் சுட்டிக்காடப்பட்டுள்ளது.